தெய்வம் வளர்த்ததமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்
உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.

 * தமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள் * ----------* The Special features of Tamil Thirumurai Thirumanam*


சண்முக கவசம் - விளக்கவுரை :: நூல் வெளியீட்டு விழா

நாள்: 14.11.2010, ஞாயிறு காலை 9.00 முதல் 1.00 மணி

இடம் : ராணி சீதை மன்றம்
603, அண்ணாசாலை, சென்னை-600 006

விழா இனிதே நடைப்பெற்றது. நிழல்படங்கள் காண்க

10.00 மணி : வரவேற்புரை: திரு.P.V.சம்பந்தன், தலைவர், திருமுறை பாதுகாப்பு சங்கம்

அருளாசியுரை: திருவாவடுதுறை ஆதீன தவத்திரு முத்துக்குமார சாமி தம்பிரான் சுவாமிகள்

காலை 9.00 மணி : திருவருட்தீந்தமிழிசை: கூத்திசை கோமான்,பாம்பனடிமை திரு.A.கஜேந்திரன்


10.00 மணி : வரவேற்புரை: திரு.P.V.சம்பந்தன், தலைவர், திருமுறை பாதுகாப்பு சங்கம்

அருளாசியுரை: திருவாவடுதுறை ஆதீன தவத்திரு முத்துக்குமார சாமி தம்பிரான் சுவாமிகள்


நூல் வெளியிட்டுத் தலைமையுரை: அருட்செல்வர் திரு.நா.மகாலிலங்கம் அவர்கள்
தலைவர், சக்தி நிறுவனங்கள் குழுமம்

நூலின் முதற்படியை பெற்று வாழ்த்துரை: திரு.தா.சந்திரசேகரன்,இ.அ.ப.(ப.நி) மேனாள் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர்

சிறப்புரை : செந்தமிழ் வாரிதி முனைவர் இரா.செல்வகணபதி சொற்கொண்டல் திரு.வீ.முத்துக்குமார குருசாமி, பாம்பனடிமை,திரு.லெ.ஆதித்தன் - தலைவர், கேபிடல் ஜெனசிஸ் நிறுவனம் (மங்கலதீபம்) மலேசியா

ஏற்புரை : நூலாசிரியர், செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

பகல் 12.50 மணி : நன்றியுரை: டாக்டர்.எம்.கே.விஸ்வேஸ்வரன், மகாதேஜோ மண்டலம்

இணைப்புரை : சித்தாந்த ரத்தினம் திரு.ச.திருச்சுடர்நம்பி, திரு.பா.சீனிவாஸ், பதிப்பாளர், தெய்வமுரசு

நூலை பெற ரூ 250/- M.O. கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

Dheiva Murasu
9/1 Manjolai First Street, Kalaimagal nagar
Ekkaduthangal, Chennai (Madras) 600 032
Tamilnadu, India.
Phone : 91-44-2225 0643, 91-44-2225 0964.
email : shri@pppindia.com

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (1853-1929 )அருளிய
சண்முக கவசம்


அறுசீர் அடி ஆசிரிய விருத்தம்

அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க. 1

ஆதியாம் கயிலைச் செல்வன்
அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
தான்இரு நுதலைக் காக்க !
சோதியாம் தணிகை யீசன்
துரிசிலா விழியைக் காக்க !
நாதனாம் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க ! 2

இருசெவி களையும் செவ்வேள்
இயல்புடன் காக்க ! வாயை
முருகவேல் காக்க! நாப்பல்
முழுதுநல் குமரன் காக்க !
துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க !
திருவுடன் பிடரி தன்னைச்
சிவசுப்ர மணியன் காக்க ! 3

ஈசனாம் வாகு லேயன்
எனதுகந் தரத்தைக் காக்க !
தேசுறு தோள்வி லாவும்
திருமகள் மருகன் காக்க !
ஆசிலா மார்பை ஈராறு
ஆயுதன் காக்க; என்றன்
ஏசிலா முழங்கை தன்னை
எழில்குறிஞ் சிக்கோன் காக்க ! 4

உறுதியாய் முன்கை தன்னை
உமையிள மதலை காக்க;
தறுகண் ஏறிடவே என்கைத்
தலத்தைமா முருகன் காக்க;
புறங்கையை அயிலோன்காக்க;
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க;
பின்முது கைச்சேய் காக்க. 5

ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை
ஊர்தியோன் காக்க; வம்புத்
தோள்நிமிர் கரேசன் உந்திச்
சுழியினைக் காக்க; குய்ய
நாணினை அங்கி கெளரி
நந்தனன் காக்க; பீஜ
ஆணியைக் கந்தன் காக்க;
அறுமுகன் குதத்தைக் காக்க. 6

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு
இறைவனார் காக்க காக்க;
அஞ்சகனம் ஓரி ரண்டும்
அரன்மகன் காக்க காக்க;
விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேச ஆசான்
திமிருமுன் தொடையைக் காக்க. 7

ஏரகத் தேவன் என்தாள்
இருமுழங் காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீரலை வாய்த்தே காக்க;
நேருடைப் பரடுஇ ரண்டும்
நிகழ்பரங் கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தன்னைத்
திருச்சோலை மலையன் காக்க. 8

ஐயுறு மலையன் பாதத்
தமர்பத்து விரலும் காக்க;
பையுறு பழநி நாத
பரன்அகம் காலைக் காக்க;
மெய்யுடல் முழுதும் ஆதி
விமலசண் முகவன் காக்க;
தெய்வ நாயக விசாகன்
தினமும்என் நெஞ்சைக் காக்க. 9

ஒலியெழ உரத்த சத்தத்
தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்க தப்பேய்
பலகணத்து எவையா னாலும்
கிளிகொள எனைவேல் காக்க;
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம்
வருந்திடாது அயில்வேல் காக்க ! 10

ஓங்கிய சீற்ற மேகொண்டு
உவணிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்டம் எஃகம்
தடிபரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர்
என் மேலே ஒச்சின்
தீங்குசெய் யாமல் என்னைத்
திருக்கைவேல் காக்க காக்க ! 11

ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம்பு ரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க ! 12

கடுவிடப் பாந்தள் சிங்கம்
கரடிநாய் புலிமா யானை
கொடிய கோள்நாய் குரங்கு
கோலமார்ச் சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும்
நான்இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க;
சானவி முளைவேல் காக்க ! 13

ஙகர மேபோல் தமீஇ
ஞானவேல் காக்க ! வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி
செய்யன்ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஒந்தி பூரான்
நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவற்றால் எற்குஓர்
ஊறிலாது ஐவேல் காக்க. 14

சலத்தில்உய் வன்மீன் ஏறு
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்தி லும்தான்
நெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினால் நான்வ ருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க;
பாவகி கூர்வேல் காக்க. 15

ஞமலியம் பரியன் கைவேல்
நவக்கிர கக்கோள் காக்க;
சுமவிழி நோய்கள் தந்த
சூலை ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை
சிரம்அடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன்
னிருபுயன் சயவேல் காக்க. 16

டமருகத்து அடிபோல் நைக்கும்
தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிர மேகம் எல்லாம்
எமையடை யாம லேகுன்
நெறிந்தவன் கைவேல் காக்க. 17

இணக்கம் இல்லாத பித்த
எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குட்டம்
மூலவெண் முளைதீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
சாமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனைஆ ளாமல்
பெருஞ்சத்தி வடிவேல் காக்க. 18

தவனமா ரோகம் வாதம்
சயித்தியம் அரோச கம்மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு
இளைப்பு உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எனையும்என் இடத்தெய் தாமல்
எம்பிரான் திணிவேல் காக்க. 19

நமைப்புறு கிரிந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவ லிப்போடு
எழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை
எய்தாமல் அருள்வேல் காக்க. 20

பல்லது கடித்து மீசை
படப டென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம்
காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி
எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி
ஓம்ஐம் ரீம்வேல் காக்க ! 21

மண்ணிலும் மரத்தின் மீதும்
மலையிலும் நெருப்பின் மீதும்
தண்நிறை சலத்தின் மீதும்
சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்
வேறெந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டி
நாதன்வேல் காக்க காக்க. 22

யகரமே போல்சூ லேந்தும்
நறும்புயன் வேல்முன் காக்க,
அகரமே முதலாம் ஈராறு
அம்பகன் வேல்பின் காக்க,
சகரமோடு ஆறும் ஆனோன்
தன்கைவேல் நடுவில் காக்க,
சிகரமின் தேவ மோலி
திகழ்ஐவேல் கீழ்மேல் காக்க. 23

ரஞ்சித மொழிதே வானை
நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கில்
திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான
வீரன்வேல் காக்க; தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்
இகலுடைக் கரவேல் காக்க. 24

லகரமே போல்கா ளிங்கன்
நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த
சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கல்
நிலைபெறக் காக்க; மேற்கில்
இகல்அயில் காக்க, வாயு
வினில்குகன் கதிர்வேல் காக்க. 25

வடதிசை தன்னில் ஈசன்
மகன்அருள் திருவேல் காக்க;
விடையுடை யீசன் திக்கில்
வேதபோதகன்வேல் காக்க;
நடக்கையில் இருக்கும் ஞான்றும்
நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்றும்
கிரிதுளைத் துளவேல் காக்க. 26

இழந்து போகாத வாழ்வை
ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல்லூண் உண்போதும்
மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம்
பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க;
திடமுடன் மயிலும் காக்க. 27

இளமையில் வாலிபத்தில்
ஏறிடு வயோதி கத்தில்
வளர்அறு முகச்சி வன்தான்
வந்தெனைக் காக்க காக்க.
ஒளியெழு காலை முன்எல்
ஓம்சிவ சாமி காக்க.
தெளிநடு பிற்ப கல்கால்
சிவகுரு நாதன் காக்க. 28

இறகுடைக் கோழித் தோகைக்கு
இறைமுன் இராவில் காக்க;
திறலுடைச் சூர்ப்ப கைத்தே
திகழ்பின் இராவில் காக்க;
நறவுசேர் தாள்சி லம்பன்
நடுநிசி தன்னில் காக்க;
மறைதொழு குழகன் எம்கோன்
மாறாது காக்க காக்க. 29

இனமெனத் தொண்ட ரோடும்
இணக்கிடும் செட்டி காக்க;
தனிமையில் கூட்டந் தன்னில்
சரவண பவனார் காக்க;
நனியனு பூதி சொன்ன
நாதர்கோன் காக்க; இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன்
கடவுள்தான் காக்க வந்தே. 30

திருச்சிற்றம்பலம்



நிகழ்வுகள்

 

Image

 

வள்ளிமலை படிவிழாவில் பாம்பன் சுவாமிகள்

 

மேலும் அறிய...

 

DRAVIDIAN RELIGIONS AND SOCIAL HARMONY

 

மேலும் அறிய...

Image 18-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

மூன்று நாள் விழா! 2-1-2009, வெள்ளி முதல் 4-1-2009, ஞாயிறு வரை

சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஆறாம் தந்திரம் முற்றோதல்.

மேலும் அறிய...

Image 18th year - Thirumanthiram Recital (3rd Round)

A Three Day Program :: 2nd - 4th Jan 2009

Full Recitation of 6th Thanthiram - in Nine sittings.

To Know More...

Image

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!

மேலும் அறிய...

 

Image18 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா ஒளிக்காட்சிகள்.

முதல் நாள்

இரண்டாம் நாள்

மூன்றாம் நாள்

 

படைப்புகள்

Imageகுற்றக்கழுவாய் (பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும் "சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.

மேலும் அறிய...

Imageவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் :

நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.

சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.

மேலும் அறிய...

Imageதிருமுருகாற்றுப் படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர். ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச் சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.

மேலும் அறிய...